இறுதிச் சுற்றுக்கு தெரிவான கொல்கத்தா மாணவன்
பிரித்தானியாவில் தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்தும், வினாடி-வினா போட்டியின் இறுதி சுற்றுக்கு கொல்கத்தாவை சேர்ந்த மாணவர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பிரித்தானிவாவின் பிரபல தொலைக்காட்சியான பிபிசி, ‘யுனிவர்சிட்டி சேலஞ்ச்’ என்ற பெயரில் ‘வினாடி வினா” போட்டியை நடத்தி வருகிறது.
மிகவும் கடினமாக கருதப்படும் இப் போட்டியின் அரை இறுதிச் சுற்று கடந்த வாரம் நடைபெற்றுது.
இப் போட்டியில் லண்டன் இம்பீரியல் பல்கலைக்கழகம் சார்பில் மாணவர்கள் குழுவொன்று பங்கேற்றிருந்தது.
அக் குழுவில் கொல்கத்தாவை சேர்ந்த கணனி விஞ்ஞானப் (உழஅpரவநச ளஉநைnஉந) பட்டதாரியான சவுரஜித் தேப்நாத் என்பவரும் இடம் பெற்றுள்ளார்.
போட்டியில் முன்வைக்கப்பட்ட பல கடினமான கேள்விகளுக்கு சவுரஜித் தேப்நாத் திறம்பட பதிலளித்தார். இதன் மூலம் அவரது குழு இறுதி சுற்றுக்கு தேர்வானது.
இப் போட்டியின் இறுதிச் சுற்று எதிர்வரும் 08 ஆம் திகதி லண்டனில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.