வடக்கின் புதிய ஆளுநர் யார் ?

13.07.2021 10:32:44

வடமாகாண ஆளுநராக மீண்டும் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஒருவர்  நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வடக்கில் முக்கிய பதவிகளில் மாற்றங்கள் இடம்பெறவுள்ளதாக அண்மைய நாட்களில் தகவல்கள் வெளியாகிவருகிறது.

அந்தவகையில் , பதவியை பெறுவதற்கான போட்டிகளும் சூடு பிடித்திருக்கின்றது.

இந்நிலையில் வடக்கிற்கான புதிய ஆளுநராக லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.