மருமகளை துஷ்பிரயோகம் செய்தவர் கைது!

08.12.2023 06:13:00

16 வயதுச் சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச் சாட்டில் ஆனமடு, பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தான் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம்  குறித்து அச்சிறுமி தான் திருமணம் செய்வதற்குத் தீர்மானித்திருந்த இளைஞனிடம் தெரிவித்துள்ள நிலையில், அதிர்ச்சியடைந்த இளைஞன்  தன் தந்தை மீது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளார்.

இதனையடுத்து குறித்த நபரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது  அவரை 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் ஆனமடு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.