விரைவில் அமெரிக்கா வீழ்ச்சியைச் சந்திக்கும்!
விரைவில் அமெரிக்கா வீழ்ச்சியைச் சந்திக்கும் என செல்வந்தரும், டெஸ்லா நிறுவனத்தின் ஸ்தாபகருமான எலோன் மஸ்க் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜோ பைடன் அரசாங்கத்தில் நாட்டின் கடன், 3000 லட்சம் கோடியை தாண்டியுள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்த நிலையிலேயே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இது குறித்து எலோன் மஸ்க் மேலும் தெரிவித்துள்ளதாவது ”அமெரிக்க அரசாங்கம் செலவினங்களை தீவிரமாகக் குறைக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் நாடு விரைவில் திவால் ஆகிவிடும்” எனத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் 5-ஆம் திகதி நடைபெறும் பொது தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதி கமலா ஹரிசும் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும் போட்டியிடுகின்றனர்.
இருவரும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் எலோன் மஸ்க் டொனால்ட் ட்ரம்புக்கு ஆதரவாக சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டு வருகிறார்.
அது மட்டும் இல்லாமல் ட்ரம்பின் பிரச்சார குழுவினருக்கு நிதி உதவி அளித்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.