இலங்கையின் உத்தியோகப்பூர்வ கையிருப்பு வீழ்ச்சி!

08.07.2025 08:07:18

இலங்கையின் உத்தியோகப்பூர்வ வெளிநாட்டு கையிருப்பு சொத்துக்கள் 2025 ஜூன் மாதத்தில் 6.08 பில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்படுகின்றது.

இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்டுள்ள அண்மைய தரவுகளிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் இந்த தொகை 6,286 பில்லியனாக இருந்தது.

அதன்படி, ஜூன் மாதத்தில் மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ கையிருப்பு சொத்துக்களின் அளவு 3.3% அல்லது $206 மில்லியனால் குறைந்துள்ளது.