ஜப்பானிய உதவித்திட்டங்கள் மீள ஆரம்பம்!

25.07.2024 08:37:00

நாட்டில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள ஜப்பானிய உதவியின் கீழ் செயற்படுத்தப்பட்ட திட்டங்களை மீள ஆரம்பிப்பதற்கான நிதியை வழங்குவதாக ஜப்பான் அரசாங்கம் நேற்று நிதியமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

 

அதன்படி, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய அபிவிருத்தித் திட்டம், பயன்பாட்டுத் திட்டங்கள், சுகாதாரத்துறை மேம்பாட்டுத் திட்டங்கள், கிராமிய அபிவிருத்தித் திட்டங்கள் உட்பட இடைநிறுத்தப்பட்ட பல திட்டங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகாமையின் தலைவர் கலாநிதி தனகா அகிஹிகோ, நிதியுதவியை மீள ஆரம்பிப்பது குறித்து உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்த நிகழ்வில் திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன, இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் Misukoshi Hideki மற்றும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் சிரேஷ்ட பிரதிநிதி திருமதி Ide Yuri ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.