ஐசிசியின் புதிய ஒருநாள் தரவரிசை பட்டியல் வெளியீடு!

15.10.2025 14:29:29

சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் வெளியிட்டுள்ள அண்மைய புதுப்பிப்பின்படி, ஐ.சி.சி ஆடவர் ஒருநாள் அணி தரவரிசையில் இலங்கை 4 ஆவது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

 

இந்தியா 124 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

அதைத் தொடர்ந்து நியூசிலாந்து (109) மற்றும் அவுஸ்திரேலியா (106) அணிகள் உள்ளன.

அதேநேரம், ஒருநாள் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் சரித் அசலங்க ஏழாவது இடத்தில் உள்ளார்.

ஒருநாள் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்ஷன மூன்றாவது இடத்தில் உள்ளார்.

ஒருநாள் பந்து வீச்சு தவரிசையில் ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் 710 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் சுப்மன் கில் 784 புள்ளிகளுடன் முதலிடத்திலும் உள்ளனர்.