
பிரபல நகைச்சுவை நடிகர் திடீர் மரணம் -அதிர்ச்சியில் திரையுலகம்
பிரபல நகைச்சுவை நடிகர் திடீரென மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.
37 வயதான மதுரையை சேர்ந்த தீப்பெட்டி கணேசன் என்ற நகைச்சுவை நடிகரே மரணமடைந்தவராவார்.இவர் ரேஷ்மா என்ற பெண்ணை காதலித்து கடந்த 2013ல் திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
இந்த நிலையில் உடல்நலக்குறைவால் மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் தீப்பெட்டி கணேசன் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் அவர் இன்று காலமானார். தீப்பெட்டி கணேசனின் மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தமிழில் பில்லா 2, ரேணிகுண்டா, வேல்முருகன் போர்வெல்ஸ், தென்மேற்கு பருவக்காற்று போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
கொரோனா காலத்தில் வருமானம் இல்லாத சூழலில் அவரின் குடும்பமும் கஷ்டப்பட்டு வந்தது. ஊரடங்கு காலத்தின் தன் குழந்தைக்கு பால் வாங்க கூட காசில்லை என்றும் ஒரு முறை அவர் வேதனையுடன் கூறியிருந்தார்.
இதையடுத்து, நடிகரும் பாடலாசிரியருமான சினேகன், தீப்பெட்டி கணேசனின் வீட்டுக்கு நேரடியாக சென்று, மளிகை சாமான்கள் வாங்கிக் கொடுத்து விட்டு வந்தார். குழந்தைகள் ஒரு வருட படிப்புச் செலவை ஏற்றுக் கொள்வதாக உறுதியளித்திருந்தார். எனினும், தீப்பெட்டி கணேசன் கடும் மன அழுத்தத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது.