இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரிலிருந்து இரு முக்கிய ஆஸி வீரர்கள் விலகல்!

21.02.2023 23:08:05

 

இந்திய அணிக்கெதிரான போர்டர் கவஸ்கர் டெஸ்ட் தொடரிலிருந்து, அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்னர் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஜோஸ் ஹசில்வுட் ஆகியோர் விலகியுள்ளனர்.

 

ஏற்கனவே நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், முதலிரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்து நெருக்கடியில் உள்ள அவுஸ்ரேலிய அணிக்கு, இந்த இரு முக்கிய வீரர்களின் இழப்பும் பேரிழப்பாக பார்க்கப்படுகின்றது.

இரு அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி, எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி இந்தூரில் ஆரம்பமாகவுள்ளது.