எல்கே அத்வானி மருத்துவமனையில் அனுமதி.
27.06.2024 07:52:45
பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்கே அத்வானி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியிருக்கும் செய்தி பாஜக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவின் மூத்த தலைவர் எல்கே அத்வானி அவர்களுக்கு தற்போது 96 வயது ஆகி வரும் நிலையில் அவர் டெல்லியில் உள்ள தனது வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். இந்த நிலையில் நேற்று திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் டெல்லியில் மருத்துவ குழு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது எல்கே அத்வானி அவர்களின் உடல் நலம் சீராக உள்ளது என்றும் அவர் தொடர்ந்து 24 மணி நேரமும் மருத்துவ குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.