இலங்கை துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான கப்பலில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுற்றுலா!

10.01.2024 15:59:51

இலங்கை துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான ஹன்சகாவா மற்றும் தியாகுல்லா என்ற இரண்டு கப்பல்களில் 50 இக்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று சுற்றுலா மேற்கொண்டுள்ளமையானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

குறித்த சுற்றுலா துறைமுக இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர விடுத்த அழைப்புக்கு அமைய, இலங்கை துறைமுக அதிகாரசபை இந்த இரண்டு படகுகளை ஒதுக்கியுள்ளது.

இந்த இன்பச் சுற்றுலாவில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அனைத்து உணவு மற்றும் குளிர்பானங்களும் அதிகார சபையினால் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

50 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சுற்றுலாவுக்காக இலங்கை துறைமுக அதிகாரசபை 25 இலட்சம் ரூபாய்க்கும் மேல் செலவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை துறைமுக இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகரவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சுற்றுலாவுக்கு தேவையான உணவு மற்றும் குளிர்பானங்கள் மற்றும் பொருட்களின் பட்டியலை வழங்குமாறு துறைமுக அதிகார சபையின் தலைவரிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது