சூப்பர் ஸ்டாருடன் படத்தில் நடிக்கிறாரா சுகானா கான்?

19.03.2024 07:23:00

இந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான். இவர் நடிப்பில் வெளியான பதான் படம் பாலிவுட் சினிமாவுக்கு புதிய உத்வேகத்தை கொடுத்து, வசூலிலிலும் சாதனை படைத்தது.

இதையடுத்து, அட்லீ இயக்கத்தில், ஷாருக்கான், நயன்தாரா, பிரியாமணி உள்ளிட்டோர் நடிப்பில்  சமீபத்தில் வெளியான படம் ஜவான். இப்படமும் வசூலில் சாதனை படைத்தது.

இந்த நிலையில், ஷாருக்கான் அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகள் சுகானா கான். இவர் சோயாஅக்தர் இயக்கத்தில்  வெளியான தி ஆர்ச்சீஸ் என்ற படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். இப்படம் ஓடிடியில் வெளியானது.

இதையடுத்து, சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், சுஜோய் கோஷ் இயக்கத்தில் உருவாகும் கிங் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது.
 

 இப்படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து அவர் மகள் சுகானா கான் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

 

இந்த நிலையில், ஷாருக்கானும், சுகானாவும் ஒரு ஜீப்பில்  ஒன்றாக போஸ் கொடுக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.
 

அதனால் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கலாம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.