வெளிநாட்டுக்கு படையெடுக்கும் இலங்கையர்கள்

24.05.2022 03:27:42

இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்றுச் செல்லும் வீதமானது 286 வீதத்தால் அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நேற்று தெரிவித்துள்ளது.

பணியகத்தின் தரவுகளின் படி, 2022 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் 105,821 நபர்கள் தொழில் வாய்ப்புக்களைத் தேடி, உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் மூலம் நாட்டில் இருந்து வெளியேறியுள்ளனர்.

கடந்த 2021 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களுடன் ஒப்பிடுகையில் இது 286 சதவீதம் அதிகரிப்பாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் 27,360 பேர் வேலைவாய்ப்புகளுக்காக நாட்டில் இருந்து வெளியேறியுள்ள அதேவேளை, இந்த எண்ணிக்கை இவ்வாண்டு 78,461 ஆக உயர்வடைந்துள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக கட்டாருக்கு 19 ஆயிரத்து 133 பேரும் குவைத்திற்கு 12,701 பேரும் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு 11,000 பேரும் தென்கொரியாவிற்கு ஆயிரத்து 754 பேரும் தொழில்வாய்ப்புகளுக்காக சென்றுள்ளனர்.