அட நம்ம கோவை சரளாவா ?

20.05.2022 15:00:00

பிரபு சாலமன் இயக்கத்தில் குக் வித் கோமாளி புகழ் அஸ்வின், கோவை சரளா நடிப்பில் விரைவில் வெளியாகப் போகும் திரைப்படம் செம்பி.

மைனா, கும்கி, கயல் என அடுத்தடுத்து ஹிட் கொடுத்த பிரபு சாலமன் இயக்கத்தில் கடைசியாக வெளியான படங்களான தொடரி, காடன் போன்ற படங்கள் தோல்வியை தழுவின.

கோவை சரளா

இதுவரை காமெடி வேடங்களில் மட்டுமே நடித்துவந்த கோவை சரளா இந்த படத்தில் சீரியஸான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இவருடன் குக் வித் கோமாளி நிகழ்ச்சி புகழ் அஸ்வின் நடிக்கிறார். மிகவும் எதிர்ப்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் ஃபஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது.