திரைவி" போஸ்டரை இயக்குனர் சசி வெளியிட்டார்!
22.05.2024 07:15:00
முனிஷ் காந்த் , அசோக், ஆஷ்னா சவேரி, நிழல்கள் ரவி, சரவண சுப்பையா, ராட்சஷன் சரவணன், வினோத் சாகர் ஆகியோரின் நடிப்பில் உருவான "திரைவி" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பூ, பிச்சைக்காரன் புகழ் இயக்குனர் சசி வெளியிட்டார்.
நித்தி கிரியேட்டர்ஸ் சார்பில் பி. ராஜசேகரன் தயாரிப்பில், முருகானந்தம் இணை தயாரிப்பில்,கார்த்தி தட்சிணாமூர்த்தி இயக்கியிருக்கும் திரைவி படத்தை இயக்குனர் சசி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டார்.
இந்த படம் குறித்து பேசிய இயக்குனர் கார்த்தி தக்ஷிணாமூர்த்தி....
உலகில் நல்லவர்கள் யாரும் கிடையாது கெட்டவர்களும் யாரும் கிடையாது.
சூழ்நிலைதான் அவரவரை அடையாளப்படுத்துகிறது எனும் கருத்தை வலியுறுத்தும் விதமாக எடுக்கப்பட்ட படம் தான் "திரைவி" என்று கூறினார்.