9 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் நிசான்!
உலகளாவிய விற்பனை சரிவுகளுக்கு மத்தியில் ஜப்பானிய கார் தயாரிப்பாளரான நிசான் (Nissan) மோட்டார் நிறுவனம் சுமார் 9 ஆயிரம் பணியாளர்களை வேலை நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.
அத்துடன் நிறுவனம், அதன் உலளாவிய வாகன உற்பத்தியையும் 20 சதவீதம் குறைப்பதற்கு தயாராகி வருவதாக வியாழக்கிழமை (07) தெரிவித்துள்ளது.
சீனா மற்றும் அமெரிக்காவில் விற்பனை சரிவுக்கு மத்தியில் நடப்பு நிதியாண்டில் 2.6 பில்லியன் அமெரிக்க டொலர் செலவை குறைப்பதற்கான நிறுவனத்தின் போராட்டத்துக்கு மத்தியில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
வேலை நீக்கம் எங்கு செய்யப்படும் என்பது பற்றிய விவரங்களுக்கான கோரிக்கைக்கு நிசான் உடனடியாக பதிலளிக்கவில்லை என்று பிபிசி செய்திச் சேவை கூறியுள்ளது.
இந் நிறுவனம் வடகிழக்கு இங்கிலாந்தில் உள்ள சுந்தர்லேண்டில் (Sunderland) உள்ள அதன் உற்பத்தி ஆலையில் 6,000 க்கும் அதிகமான பணியாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது.
மூன்றாவது பெரிய வாகன உற்பத்தியாளரான நிசானின் பங்குகள் வெள்ளிக்கிழமை (08) காலை டோக்கியோவில் 6% குறைவாக வர்த்தகம் செய்யப்பட்டன.
சீனாவில் வளர்ந்து வரும் போட்டி விலை வீழ்ச்சிக்கு மத்தியில், பல வெளிநாட்டு கார் தயாரிப்பாளர்கள் மற்றும் உள்ளூர் நிறுவனங்களுடன் போட்டியிட முடியாமல் நிசான் திணறுகிறது.
பணவீக்கம், அதிக வட்டி விகிதங்கள் என்பவற்றால் புதிய வாகனங்களின் விற்பனையில் பாதிப்பை எதிர்கொண்ட அமெரிக்காவிலும் நிசான் நிறுவனம் போராடி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.