மீண்டும் கொரோனா தொற்றுக்குள்ளான இளவரசர் சார்லஸ்
11.02.2022 03:10:39
பிரித்தானிய இளவரசர் சார்லஸுக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இளவரசர் சார்லஸ் 2020 ஆம் ஆண்டில் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மீண்டும் இரண்டாவது முறையாக கொரோனா பாதிப்புக்கு இலக்காகியுள்ளார்.
திட்டமிடப்பட்ட சந்திப்புகள் அனைத்தையும் ரத்து செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.