மார்டன் ஃபுசோவிக்ஸ், 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேற்றம் !

06.03.2021 10:26:46

ஏபிஎன் அம்ரோ உலக டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டிகளில், மார்டன் ஃபுசோவிக்ஸ் மற்றும் போர்னா கோரிக் ஆகியோர் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியொன்றில், இத்தாலியின் மார்டன் ஃபுசோவிக்ஸ், அமெரிக்காவின் டொமி போல்லை எதிர்கொண்டார்.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், மார்டன் ஃபுசோவிக்ஸ், 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.


இன்னொரு ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியொன்றில், குரேஷியாவின் போர்னா கோரிக்கும், ஜப்பானின் கெய் நிஷிகோரியும் மோதினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், போர்னா கோரிக்கு கெய் நிஷிகோரி கடும் நெருக்கடி கொடுத்தார். இதனால். இவர்கள் விளையாடிய இரண்டு செட்டுகளும் டை பிரேக் வரை நீண்டன.

இதில் இருவரும் விட்டுக்கொடுக்காமல் விளையாடிய போதும், இறுதிவரை ஆக்ரோஷமாக விளையாடிய போர்னா கோரிக், செட்டுகளை 7-6, 7-6 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று அரையிறுதிக்குள் அடியெடுத்து வைத்துள்ளார்.