யாழ்ப்பாணத்தை சேர்ந்த தாயும் மகனும் அவுஸ்ரேலியாவில் பலி
08.03.2022 06:42:24
மேற்கு சிட்னியின் புறநகர் பகுதியான வென்ட்வொர்த்வில்லில் வெள்ளத்தில் ஆண் மற்றும் ஒரு பெண்ணின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் நேற்று தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அது காணாமல் போன தாய் மற்றும் மகனுடையதா என்பது இன்னும் உறுதியாகவில்லை. எனினும், அவர்கள் பயணித்த கார் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், ஏற்கனவே மீட்கப்பட்டிருந்தது.
அந்த காரில் ஆவணங்கள் காணப்பட்ட போதும், இருவரும் இருக்கவில்லை. இந்த நிலையில், ஆண், பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ள அது காணமல்போன இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்த தாய், மகனுடையதா என்பதை உறுதி செய்யும் பணியில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.