
கொலம்பியா ஜனாதிபதி வேற்பாளர் மீது துப்பாக்கிசூடு!
08.06.2025 14:05:28
கொலம்பியாவின் தலைநகரத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார நடவடிக்கையின் போது கொலம்பிய ஜனாதிபதி வேட்பாளர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
மேலும், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஜனாதிபதி வேட்பாளர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன், சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்திற்குப் பின்னர் குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக அந்நாட்டு போலீசார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.