பிரதமர் இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள மாட்டார்

11.04.2021 10:54:39

கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் எடின்பர்க் டியூக்கின் இறுதி சடங்கில் கலந்துகொள்ள மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டியூக்கின் பிள்ளைகள், பேரப் பிள்ளைகள் மற்றும் நெருங்கிய குடும்பத்தினர் என இறுதிச் சடங்கில் 30 பேர் மட்டுமே பனிக்ரக முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரதமர் அரச குடும்பத்தினருக்கு ஏற்றவாறு செயற்பட விரும்புகிறார், எனவே முடிந்தவரை பல குடும்ப உறுப்பினர்களை அனுமதிக்க சனிக்கிழமை இடமபெரும் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள மாட்டார்” என செய்தித் தொடர்பாளர் கூறினார்.

இளவரசர் பிலிப் விண்ட்சர் கோட்டையில் கடந்த வெள்ளிக்கிழமை, தனது 99 வயதில் இயற்கை எய்தினார்