மாயமான தமிழக மீனவர் ராஜ்கிரண் சடலமாக மீட்பு

19.10.2021 10:51:26

இலங்கை கடற்படை தாக்குதலில் மாயமான தமிழக மீனவர் ராஜ்கிரண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினத்தில் இருந்து படகு ஒன்றில் 3 பேர் மீன் பிடிக்க சென்றுள்ளனர்.

இந்த கப்பலை இலங்கை கடற்படையினர் மோதவிட்டு கவிழ்த்துள்ளனர். 3 பேர் கடலில் தவறி விழுந்த  நிலையில் 2 பேரை மீட்டு இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

 உயிருடன் மீட்கப்பட்ட சுகந்திரன், சேவியர் ஆகியோரை இந்தியாவிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.