நாடொன்று எடுத்த அதிரடி நடவடிக்கை!

21.07.2026 13:33:43

துருக்கிய நகரங்களில் இருந்து 2025ம் ஆண்டிற்குள் கிட்டத்தட்ட 10 லட்சம் தெரு நாய்கள் அகற்றப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துருக்கி அரசு தங்களது நகரங்களில் சுற்றித் திரியும் தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதில் பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. துருக்கியின் உள்துறை அமைச்சர் முஸ்தபா சிஃபிலி தெரிவித்த தகவலில், 2025ம் ஆண்டிற்குள் துருக்கியின் பொது இடங்களில் சுற்றித் திரிந்த 10 லட்சம் தெரு நாய்களை அகற்றப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

    

 

துருக்கியில் விலங்கு பாதுகாப்பு சட்டத்தில் கொண்டுவரப்பட்ட முக்கிய மாற்றமே இந்த தெரு நாய்களின் எண்ணிக்கை கட்டுக்குள் கொண்டு வர பட்டதற்கான முக்கிய காரணம் என்று பால்கன் இன்சைட் ஊடக அறிக்கை தெரிவித்துள்ளது.

தெரு நாய்களுக்கு கருத்தடை செய்து மீண்டும் தெருக்களில் விடும் நடைமுறை பயன் அளிக்காததை தொடர்ந்து, கடந்த 2024ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட புதிய விதிகளின் படி, ஒவ்வொரு நகராட்சி தெருக்களிலும் உள்ள நாய்களை நிரந்தரமாக நீக்க கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

நாய்களை தத்தெடுப்பதே முதன்மையான குறிக்கோளாக இருந்தாலும், தீவிரமான ஆக்ரோஷமான குணம் கொண்ட நாய்கள் மற்றும் தீர்க்க முடியாத நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள நாய்களை கருணை கொலை செய்ய சட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் தெரு நாய்களை பராமரிக்க பிரம்மாண்டமான புதிய காப்பகங்கள் உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது.