ரோமியோ படத்தை அன்பே சிவம் ஆக்கிவிடாதீர்கள்
கடந்த சில மாதங்களாக தமிழ்நாட்டில் தமிழ் படங்களுக்கான வரவேற்பு மிகக் குறைவாக உள்ளது. அதற்கேற்றார்போல ரசிகர்களை கவரும் படங்கள் எதுவும் ரிலீஸாகவில்லை. இந்நிலையில் கடந்த வாரம் முன்னணி நடிகர்களான விஜய் ஆண்டனி மற்றும் ஜி வி பிரகாஷ் நடித்த ரோமியோ ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகின.
இந்நிலையில் விஜய் ஆண்டனியின் ரோமியோ திரைப்படத்தை தமிழகத்தின் முன்னணி விநியோக நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டும் போதுமான வரவேற்பைப் பெறவில்லை. படத்துக்கு மோசமான விமர்சனங்களும் வந்தன. குறிப்பாக ஆன்லைனில் பிரபலமாக இருக்கும் ப்ளுசட்ட மாறன் வழக்கம்போல இந்த படத்தைக் கழுவி ஊற்றி இருந்தார்.
இந்நிலையில் இப்போது இதுகுறித்து நடிகரும் தயாரிப்பாளருமான விஜய் ஆண்டனி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் “பல நல்ல படங்களை தவறாக விமர்சித்துக் கொல்லும் ப்ளு சட்டை மாறன் போன்ற சிலருக்கும், இவங்க சொல்றதையெல்லாம் உண்மை என்று நம்பி, ரோமியோ போன்ற நல்ல படங்களை கொண்டாடாமல், தமிழ் சினிமாவை குறை சொல்லும் அறிவி ஜீவிகளுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
என் அன்பு மக்களே ரோமியோ ஒரு நல்ல படம். போய் பாருங்க புரியும். ரோமியோவ அன்பே சிவம் ஆக்கிவிடாதீர்கள்” எனக் கூறியுள்ளார்.