
ரஷ்யாவை எதிர்த்து போர் புரியும் நேட்டோ நாடுகள்!
ரஷ்யாவிற்கு எதிராக அனைத்து நேட்டோ நாடுகளும் போரிடுவதாக ஜனாதிபதி புடின் குற்றம் சாட்டியுள்ளார். உக்ரைனில் போர் நடவடிக்கையில் ரஷ்யாவிற்கு எதிராக அனைத்து நேட்டோ நாடுகளும் போரிட்டு வருவதாக வியாழக்கிழமை ரஷ்ய ஜனாதிபதி புடின் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் போரில் உக்ரைனுக்கு உதவுவதற்காக ஐரோப்பாவில் புதிய உளவுத்துறை மையத்தை அமைத்து இருப்பதாகவும், தரைவழி தாக்குதலை முன்னெடுப்பதற்கான பயிற்சிகளை வழங்குவதற்காக பயிற்சியாளர்களை தொடர்ந்து வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார். |
இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், ரஷ்யா தன்னை தகவமைத்துக் கொண்டு போர் திறன் மிக்க நாடாக இருப்பதாக புடின் குறிப்பிட்டுள்ளார். புடின் இந்த கருத்தை வால்டாய் விவாத மன்றத்தில் முன்வைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது. ரஷ்யாவை காகித புலி என்று வர்ணித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கருத்துக்கும் இந்த நிகழ்வில் புடின் பதிலடி கொடுத்துள்ளார். அதில், டிரம்ப் ரஷ்யாவை காகித புலி என்று விளையாட்டாக சொன்னாரா என்று தெரியவில்லை, ஒருவேளை அப்படியே கூறி இருந்தால் காகித புலியுடன் வந்து மோதுங்கள் என்று புடின் சவால் விடுத்துள்ளார். |