அமெரிக்காவில் பரவி வரும் கேண்டிடா ஆரிஸ் தொற்று - சிகிச்சை அளிப்பதில் கடும் சவால்...

25.07.2021 11:52:04

அமெரிக்காவில் பரவி வரும் புதிய பூஞ்சை தொற்று ரத்த ஓட்டத்தை பாதித்து மரணத்தை ஏற்படுத்தும் அளவுக்கு ஆபத்தானது.

அமெரிக்காவில் புதிதாக கேண்டிடா என்ற ஆரிஸ் என்ற ஒரு வகை பூஞ்சை நோய் பரவி வருகிறது. இந்நோய்க்கு சிகிச்சையளிக்க இயலவில்லை என்று அமெரிக்க சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த பூஞ்சை தொற்று ரத்த ஓட்டத்தை பாதித்து மரணத்தை ஏற்படுத்தும் அளவுக்கு ஆபத்தானது. வியாழக்கிழமை டல்லாஸ் பகுதி மற்றும் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள மருத்துவமனைகளில் இதன் பாதிப்புகள் முதலாவதாக அறியப்பட்டுள்ளது.

அமெரிக்க சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ள தகவலின்படி இதுவரை வாஷிங்டனில் 101 பேருக்கும், டல்லாஸ் மருத்துவமனைகளில் 22 பேருக்கும் கேண்டிடா ஆரிஸ் தொற்று உள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது

காய்ச்சல் மற்றும் குளிர் ஆகியவை கேண்டிடா ஆரிஸ் நோய்த்தொற்றின் பொதுவான அறிகுறிகளாகும். நோய் பாதித்தவர்களுக்கு ஆன்டிபயாடிக் சிகிச்சை அளித்தபோதும் உடல்நிலை சீரடையவில்லை என அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் தெரிவித்துள்ளன.

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வரும் நிலையில், இந்த புதிய தொற்று மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.