விஜயகாந்த் காலமானார் பிரபல நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்த்(71) காலமானார்!
28.12.2023 04:44:55
தேமுதிக தலைவர் விஜயகாந்த்-க்கு இன்று காலை கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், அவருக்கு மூச்சுவிடுவதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை தரப்படுவதாக சொல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் காலமானதாக தற்போது அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. அவருக்கு வயது 71.