போப் ஆண்டவர் பிரான்சிஸ் அடுத்த மாதம் சுற்றுப்பயணம்

07.11.2021 10:30:27

போப் பிரான்சிஸ் அடுத்த மாதம் ஐந்து நாள் பயணமாக கிரீஸ் மற்றும் கிழக்கு மத்திய தரைக்கடல் தீவு நாடான சைப்ரஸ் ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்கிறார் என்று வாடிகன் நேற்று முன் தினம் உறுதிப்படுத்தியது. 

 

வருகிற டிசம்பர் 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை, சைப்ரஸ் தீவு நாட்டின் தலைநகரான நிக்கோசியாவிலும், 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை, கிரேக்க நாட்டின் தலைநகரான ஏத்தென்ஸ் மற்றும், அந்நாட்டின் லெஸ்போஸ் தீவிலும் பயணங்களை மேற்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

இந்தப் பயணத்தின் மற்ற விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று செய்தியாளர்களிடம் கூறியுள்ள புரூனி, சைப்ரஸ் தீவு நாடு, மற்றும் கிரேக்க நாட்டின் அரசு அதிகாரிகள் மற்றும் பேரவைகளின் அழைப்பின்பேரில் அந்நாடுகளுக்கு போப் ஆண்டவர் செல்கிறார் என்றும் கூறியுள்ளார்.