சுகாதார நடைமுறைகளுடன் இடம்பெற்றது சந்நிதியான் கொடியேற்றம்!

09.08.2021 04:00:00

இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன் நேற்று சந்நிதியான்  கொடியேற்றம் சிறப்பாக இடம்பெற்றது.

 தற்போது நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் இறுக்கமான சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மட்டுப்படுத்தப்பட்ட 100 பேரின் பங்குபற்றலுடன் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு செல்வ சந்நிதி முருகன் ஆலய வருடாந்த கொடியேற்ற உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது. 

செல்வச்சந்நிதி ஆலயத்திற்கு நுழைவதற்கு அனைத்து இடங்களிலும் வீதித் தடைகள் போடப்பட்டு காவல்துறை இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டு ஆலயத்திற்குள் எவரும் செல்லதடை விதிக்கப்பட்ட நிலையில் பி.சி ஆர், அன்டியன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சுகாதாரப் பிரிவினரால் அனுமதிக்கப்பட்ட 100 பேருடன் ஆலயத்தின் வருடாந்த கொடியேற்ற உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது.