ஜிஎஸ்டி வரி விதிப்பிற்கு எதிர்ப்பு

18.07.2022 12:28:29

நாடளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று காலை மாநிலங்களவையில் தொடங்கியது. ஆகஸ்ட் 12 வரை நடைபெறவுள்ள கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், இன்று காலை மாநிலங்களவை கூடியவுடன் புதிதாக தேர்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து, அவையின் பிற அலுவல்கள் தொடங்கியவுடன், அரிசி, தயிர் உள்ளிட்ட பண்டல் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 5 சதவீத ஜி.எஸ்.டி. வரியை திரும்பப் பெறக் கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபடத் தொடங்கினர். மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் இருக்கைக்கு முன்பு நின்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கமிட்டதால் நாளை காலை 11 மணிவரை அவை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.