ஜனாதிபதியினால் மறைத்து வைக்கப்பட்ட பணம்,பதுங்கு குழிகள் கண்டுப்பிடிப்பு

10.07.2022 05:41:36

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இல்லம் மற்றும் ஜனாதிபதி செயலகம் என்பன முற்றுமுழுதாக போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது போராட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகத்தில் தங்கியுள்ளதுடன், அங்கு ஜனாதிபதியினால் மறைத்து வைக்கப்பட்டுள்ள பணம்,பதுங்கு குழிகளை கண்டுப்பிடித்துள்ளனர்.

ஜனாதிபதி மாளிகைக்குள் உள்ள இரகசிய பாதைகளை போராட்டக்காரர்கள் கண்டுபிடித்துள்ளதுடன்,போர்க்காலத்தில் ஜனாதிபதி மாளிகையில் அவசரநிலைக்கு பயன்படுத்திய நிலத்தடி வீடொன்றும் கட்டப்பட்டுள்ளமையும் கண்டுபிடித்துள்ளனர்.

இது தொடர்பிலான காணொளிகள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.