கங்குவா படத்தை பார்த்து பாராட்டிய சூர்யா!

03.03.2024 09:00:00

கங்குவா படத்தில் சூர்யா  நடித்து வருகிறார். இப்படத்தை சிறுத்தை சிவா இயக்க, ஸ்டுடியோ கிரீன்  நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் டப்பிங்கை சமீபத்தில் சூர்யா தொடங்கியதாக தகவல் வெளியானது.
 

 

இந்த நிலையில், கங்குவா படத்தை சமீபத்தில் சூர்யா பார்த்துள்ளார். இப்படம் எடுத்தது வரைக்கும், எடிட்டிங் செய்தது வரைக்கும் அவர் பார்த்து, படக்குழு மற்றும் இயக்குனர் சிறுத்தை சிவாவை கட்டியணைத்து, பாராட்டியுள்ளார்.
 

கங்குவா படத்தை தான் பார்த்தது பற்றி சூர்யா தன் நெருங்கிய வட்டாரத்தில் கூறியுள்ளார்.

ஆனாலும், இப்படத்தின் விபிஎக்ஸ் சரியில்லை என்று  குறைப்பட்டுள்ளார். இதுகுறித்து இயக்குனர், விஎஃப்எக்ஸ் டீமிடமும் கூறி இதைச் சரி செய்யும் படியும் நேர்த்தியாக வரும்படியும் கூறியுள்ளார்.

இதைச் சரிசெய்த பின்னர், இப்படத்தின் ரிலீஸ் தேதி பற்றி அறிவிக்கலாம், அதற்கு முன்னர், இப்படத்தின் ரிலீஸ் பற்றி எதுவும் பேச வேண்டாம் என்று சூர்யா படக்குழுவுக்கு  உத்தரவிட்டுள்ளாராம்.

 

இப்படம் அனைத்து வகையிலும்  சரியாக வந்தபின் விரைவில் இப்படம் ரிலீஸாகும் என்று தெரிகிறது. இதனால் சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.