நெல் சந்தைப்படுத்தல் சபையின் விசேட அறிவித்தல்

12.06.2022 09:40:27

நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் உள்ள 43,000 மெட்ரிக் டன் நெல்லை அரிசியாக்கி சந்தைக்கு விநியோகிப்பதற்கு இன்று முதல் நடவடிக்கை எடுப்பதாக அதன் தலைவர் நீல் டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய சதொச, கூட்டுறவு நிலையங்கள் மற்றும் சிறப்பு அங்காரிகள் ஊடாக நிவாரண விலையில் அரிசியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறித்த நிறுவனங்களிடம் இருந்து இதற்கான முன்பதிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

சிவப்பு மற்றும் வெள்ளை கெக்குலு அரிசி ஒரு கிலோகிராம் 197 ரூபாவுக்கும், நாடு ஒரு கிலோ 199 ரூபாவுக்கும், சம்பா 205 ரூபாவுக்கும், கீரி சம்பா 215 ரூபாவுக்கும் கொள்வனவு செய்ய முடியும் என அவர் தெரிவித்தார்.

நுகர்வோருக்கு நிவாரண விலையில் அரிசியை வழங்கும் வகையில் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படுவதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் நீல் டி சில்வா தெரிவித்துள்ளார்.