ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் குயின் 2

31.05.2022 18:04:02

 

2019ம் ஆண்டு ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து குயின் என்ற ஒரு வெப் தொடர் வெளியானது. கௌதம் மேனன்- பிரசாந்த் முருகேசன் ஆகியோர் இணைந்து இந்த தொடரை இயக்க, ஜெயலலிதா வேடத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது குயின் வெப் தொடரின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தை இயக்கிய கௌதம் மேனனும், பிரசாத் முருகேசனும் இணைந்து மீண்டும் இயக்க, ரம்யா கிருஷ்ணனே இந்த தொடரில் மீண்டும் தான் ஏற்கனவே நடித்த ஜெயலலிதா வேடத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பு தளத்தில் தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டு அதை உறுதி செய்திருக்கிறார். ரம்யாகிருஷ்ணன்.