கனடாவில் சில்க் தயாரிப்புகளில் பரவும் பாக்டீரியா தொற்று
கனடாவில் தேங்காய்ப்பால், பாதாம் பால் போன்ற பால் மாற்று பொருட்களை விற்கும் Silk நிறுவனத்தின் தயாரிப்புகளை திரும்பப்பெறுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. Silk தயாரிப்புகளில் லிஸ்டீரியா (Listeria) எனும் பாக்டீரியா பரவியிருப்பதாக கூறப்படும் நிலையில் நிறுவனம் இந்த நடவடிக்கையை மேற்கொள்கிறது. பிரபலமான அமெரிக்க பால் மாற்று பிராண்டான Silk தயாரிப்புகளை திரும்பபெறுவதற்கான அறிவிப்பு ஏற்கெனவே ஜூன் மாதம் வெளியிடப்பட்டது. இப்போது மீண்டும் அந்த அறிவிப்பு புதுப்பிக்கப்பட்டுள்ளது. |
இந்த லிஸ்டீரியா பாக்டீரியாவால் இதுவரை நாட்டின் பல மாகாணங்கள் மற்றும் பிரதேசங்களில் 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், மூன்று பேர் இருந்துள்ளனர். இதைத்தொடர்ந்து கனடாவின் பொது சுகாதார நிறுவனம் (Public Health Agency of Canada) பொதுமக்கள் இந்தப் பால் மாற்றுப் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரித்துள்ளது. திரும்பப் பெறும் அறிவிப்பில் மொத்தம் 18 தயாரிப்புகள் உள்ளன, இதில் 7825 கொண்ட தயாரிப்பு குறியீடுகள் மற்றும் செப்டம்பர் 27, 2024 அல்லது அக்டோபர் 4, 2024 வரையிலான காலாவதி திகதிகள் அடங்கும். பாதிக்கப்பட்ட தயாரிப்புகள் Great Value Almond Beverage Unsweetened Original Great Value Almond Beverage Original Great Value Almond Beverage Vanilla Silk Almond & Coconut Unsweetened Silk Almond Original Silk Almond Dark Chocolate Silk Almond Unsweetened Silk Almond Unsweetened Vanilla Silk Almond Vanilla Silk Coconut Original Silk Coconut Unsweetened Silk Oat Original Silk Oat Vanilla Silk Oat Dark Chocolate Oat Unsweetened Silk Oat Unsweetened Vanilla Silk Almond & Cashew Unsweetened Silk Almond & Cashew Unsweetened Vanilla இவற்றில் ஏதேனும் ஒரு தயாரிப்பைக் கொண்டிருந்தால், அதனைப் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அந்தப் பொருட்களை உடனடியாக வீசவேண்டும் அல்லது வாங்கிய இடத்திற்கு திரும்பக் கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். |