குடிநீர் நுகர்வு தொடர்பில் முக்கிய அறிவுறுத்தல்
11.03.2024 07:57:55
நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மக்களைக் கோரியுள்ளது.
வரட்சியான காலநிலை இரண்டு மாதங்களுக்கு மேல் நீடிக்குமாயின் நீர் வழங்கல் மட்டுப்படுத்தப்படும் என சபையின் பிரதிப் பொது முகாமையாளர் அபிவிருத்தி அனோஜா களுவாராச்சி தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், தற்போதைய நீர்மட்டம் போதுமானதாக இருப்பதாகவும், முடிந்தவரை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே தண்ணீரை பயன்படுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டார்