துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலி

05.04.2022 11:00:00

திக்வெல்ல - ஹிரிகெட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் குறித்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.