அமெரிக்க துணை வெளியுறவு செயலாளர ரிச்சர்ட் வர்மா இலங்கை உள்ளிட்ட சில நாடுகளுக்கு விஜயம்

17.02.2024 10:27:16

அமெரிக்க துணை வெளியுறவு செயலாளர் ரிச்சர்ட் வர்மா இலங்கை, இந்தியா மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளுக்கு 6 நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.

நாளை முதல் எதிர்வரும் 23ஆம் திகதி வரை அவர் குறித்த நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த இராஜதந்திர விஜயத்தின் போது இலங்கை உள்ளிட்ட நாடுகளுடனான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் அவர் கலந்துரையாடல்களை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவரது இலங்கை விஜயத்தின் போது அமெரிக்க – இலங்கை பாதுகாப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம் இலங்கை விஜயத்தின் போது கொழும்பு துறைமுக நகரத்துக்கும் அமெரிக்க துணை வெளியுறவு செயலாளர் ரிச்சர்ட் வர்மா விஜயம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.