வீடின்றி வாழும் மக்களுக்கு வீடமைப்பு திட்டத்தினூடாக தீர்வு

17.01.2022 03:30:32

நாட்டில் வீடின்றி வாழும் பெரும்பாலான மக்களுக்கான வீடமைப்பு திட்டத்தினூடாக தீர்வினை வழங்குவதற்கு தாம் எதிர்பார்த்துள்ளதாக தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் துமிந்த சில்வா தெரிவித்துள்ளார்.

உங்களுக்கு வீடு, நாட்டிற்கு நாளை எனும் வேலைத்திட்டத்தின் கீழ், கொலன்னாவை பகுதியில், அடிக்கல் நாட்டும் மற்றும் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று (16) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் துமிந்த சில்வா, கொலன்னாவை பகுதியில் அடிகல் நாட்டி 43 தினங்களுக்குள் உரியவர்களுக்கு வீடுகள் கையளிக்கப்பட்டுள்ளன. இதே போன்று பெரும்பாலானவர்கள் வீடுகளின்றி உள்ளனர்.

வீடமைப்பு திட்டம் ஒன்றை ஏற்படுத்தி, அவர்களுக்கான வீடுகளை வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாக தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் துமிந்த சில்வா குறிப்பிட்டுள்ளார்.