இந்திய சினிமாவில் உச்சம் தொட்ட கல்கி
பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்துள்ள கல்கி திரைப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்க நாக் அஸ்வின் இயக்கியுள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த படத்தின் முதல் பாகம் நேற்று உலகம் முழுவதும் ரிலீஸாகியுள்ளது.
இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் ஜூன் 27 ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸாந்து. படம் வெளியாகி கலவையான விமர்சனங்கள் பெற்றாலும் முதல் நாளில் 150 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் படத்தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்திமூவீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வமான அறிவிப்பில் கல்கி திரைப்படம் உலகம் முழுவதும் 191.5 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக அறிவித்துள்ளனர். இதன் மூலம் முதல் நாளில் அதிகம் வசூல் செய்த இந்திய திரைப்படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது.