போஷாக்கை உறுதிப்படுத்த தேசிய திட்டம் அவசியம்

14.09.2022 10:13:28

உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கு

இலங்கையில் உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கை உறுதிப்படுத்தும் வகையில் தேசிய திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென அதிபர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கை உறுதிப்படுத்துவதற்காக கிராமிய பொருளாதார மறுமலர்ச்சி நிலையங்களை வலுவூட்டுவதற்கான ஒருங்கிணைந்த பொறிமுறையை ஸ்தாபிக்கும் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அதிபர் இதனைத் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சி நேற்று (13) பிற்பகல் அதிபர் செயலகத்தில் இடம்பெற்றது.

விவசாய நவீனமயமாக்கல்

விவசாயத்தை நவீனமயமாக்குவதன் ஊடாக உற்பத்தி மற்றும் போட்டித்தன்மையை மேம்படுத்துவதன் மூலம் விவசாயத்தை அந்நிய செலாவணி ஈட்டும் துறையாக மாற்ற வேண்டும் என அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உலகளாவிய உணவுப் பிரச்சினைக்கு முகங்கொடுத்து உணவுப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் கூட்டான முறையில் செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அதிபர்,

உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கை உறுதிப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் புதிய வேலைத்திட்டத்துடன் அனைவரும் கைகோர்க்க வேண்டும் என்றார்.