ரணிலின் வீட்டிற்கு தீ வைத்த சந்தேகநபர்கள் கைது!

02.08.2022 09:52:12

அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு தீ வைத்த வழக்கில் மூன்று சந்தேகநபர்களை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் குறித்த சந்தேகநபர்கள் மூவரும் நேற்றிரவு பிலியந்தலை மற்றும் நாரஹேன்பிட பிரதேசங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணை

சந்தேகநபர்கள் 18 மற்றும் 22 வயதுடைய மடபான மற்றும் கொழும்பு 05 ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது .

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் முன்னெடுத்து வருகின்றது.