திருவிழாவை புறக்கணித்துள்ள மீனவர்கள்

17.02.2024 10:33:39

இலங்கையில் தமிழக மீனவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிக்க போவதாக மீனவர்கள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு எட்டப்பட்டுள்ளது.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட மூன்று தமிழக மீனவர்களுக்கு சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்ற தீர்ப்பளித்ததை கண்டித்தும்,நீதிமன்ற தீர்ப்பை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும் ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிப்பதுடன் இன்று (17) முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக ஆலோசனை கூட்டத்தில் விசைப்படகு மீனவர்கள் முடிவு செய்து தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளனர்.

ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த மூன்றாம் திகதி மீன்பிடிக்க சென்று நான்காம் திகதி அதிகாலை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இரண்டு படகுகளையும் அதிலிருந்து 23 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.

மீனவர்களின் வழக்கு நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட Nhபது வழக்கை விசாரித்த நீதிபதி 23 மீனவர்களில் 20 மீனவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டதுடன் இரண்டு மீன்பிடி விசைப் படைகு ஓட்டுநர்களான பெக்கர் மற்றும் ராபர்ட் ஆகிய இருவருக்கும் ஆறு மாத காலம் சிறந்த தண்டனை விதிக்கப்பட்டது.