தமிழகத்தில் குதிரை பேர அரசியலைத் தொடங்கி வைத்ததே திமுகதான்.

06.07.2026 14:33:45

தமிழகத்தில் குதிரை பேர அரசியலைத் தொடங்கி வைத்ததே திமுகதான் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

 

திருப்பூரில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காகக் கோவை வந்தடைந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த தேர்தலில் மதிமுகவை திமுக நடத்திய விதம் தொண்டர்களைப் புண்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

அத்துடன், தமிழக முதலமைச்சர் விஜய்யின் அரசுக்கு எதிராக வரக்கூடிய அரசியல் கணைகளைத் தடுக்கும் “கவசமாகவும், கேடயமாகவும்” மதிமுக என்றும் துணை நிற்கும் என அவர் உறுதியளித்துள்ளார்.

மேலும், மேகதாது அணைத் திட்டத்திற்கு எதிராக மக்கள் மீண்டும் திரள வேண்டும் என அழைப்பு விடுத்த வைகோ, நீட் தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.