எல்லை தாண்டிய தீவிரவாதம் நட்புறவை ஊக்குவிக்காது!

17.10.2024 08:02:36

பயங்கரவாதம், தீவிரவாதம் மற்றும் பிரிவினைவாதம் ஆகிய 3 தீமைகளை சமரசமின்றி ஒழிக்க வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சிமாநாட்டில் கலந்து கொண்டு  உரையாற்றிய போதே  இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” எல்லை தாண்டிய தீவிரவாதம் மற்றும் பிரிவினைவாதம் ஆகியவை இரு தரப்பு வர்த்தகம், நட்புறவு ஆகியவற்றை  ஊக்குவிக்காது.

பிராந்தியத்தின் நிலைத்தன்மைக்கும் வளர்ச்சிக்கும் இந்தியா அர்ப்பணிப்போடு செயற்படும் இவ்வாறு ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இந்த உச்சிமாநாட்டில் எஸ்சிஓ அமைப்பின் உறுப்பு நாடுகளான இந்தியா, சீனா, ரஷ்யா, ஈரான், கஜகஸ்தான், பெலாரஸ், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

இதேவேளை கடந்த 9 ஆண்டுகளுக்கு பின்னர்  பாகிஸ்தான் செல்லும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் என்பதும் குறிப்பிடத்தக்கது.