அமைதி ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு .

14.06.2026 14:31:42

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.

 

இந்நிலையில், இந்த ஒப்பந்தம் கையெழுத்தானவுடன், சர்வதேச கப்பல் போக்குவரத்திற்காக ஹோர்முஸ் நீரிணை உடனடியாகத் திறக்கப்படும் என ட்ரம்ப் தெரிவித்துள்ள நிலையில் இதற்கு பாகிஸ்தானும் தனது உடன்பாட்டை தெரிவித்துள்ளது. 

 

இது குறித்து இந்த அமைதி ஒப்பந்தத்தில் ஈரான் சில சமரசங்களைச் செய்துகொண்டதாகக் கூறி, அந்நாட்டு மக்கள் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

ஈரானின் வடகிழக்கு நகரான மஸ்ஸாத்தில் உள்ள வெளியுறவு அமைச்சு அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டுப் போராடி வருகின்றனர். இதில் பெண்களும் பெருமளவில் பங்கேற்றுள்ளனர்.

 

மேலும் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி மற்றும் பாராளுமன்ற சபாநாயகர் காலிபாப் ஆகியோர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும், அவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டுமென்றும் போராடக்காரர்கள் முழக்கமிட்டுள்ளனர்.

 

இந்த ஒப்பந்தத்தில் என்னென்ன முடிவுகள் எடுக்கப்பட்டன என்பதில் முழுமையான வெளிப்படைத்தன்மை வேண்டுமெனவும் மக்கள் இதன்போது வலியுறுத்துகின்றனர்.