முடிவுக்கு வரவிருக்கும் ராஜபக்சர்களின் அரசியல் !

02.05.2022 09:27:11

அரசாங்கத்திற்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை மற்றும் குற்றப் பிரேரணை ஆகியவற்றை நாளை  நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

சுதந்திர சதுக்க வளாகத்தில் நேற்று இடம்பெற்ற மே தின கூட்டத்தில் கலந்துகொண்டு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு உரையாற்றிய எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, நாட்டை பொறுப்பேற்க தாம் தயாராகவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இதன்மூலம் நாட்டை அபிவிருத்தி பாதையில் இட்டு செல்ல தாம் வழி வகுக்கவுள்ளதாகவும் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார்.