ETR.FM

கமல், இளையராஜாவுக்கு தாதா சாகேப் பால்கே விருதுகள் அறிவிப்பு.

22.11.2026 14:38 1 நிமிட வாசிப்பு
கமல், இளையராஜாவுக்கு தாதா சாகேப் பால்கே விருதுகள் அறிவிப்பு.
2026ம் வருடத்திற்கான தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விருதுகள் இன்று காலை முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. அப்போது சிறந்த இயக்குனருக்கான விருது துரந்தர் படத்தை இயக்கிய ஆதித்யா தாருக்கு கிடைத்தது. சிறந்த படம் துரந்தர், சிறந்த நடிகர் ரன்வீர் சிங் (துரந்தர்), சிறந்த விமர்சனங்கள் பெற்ற படம் காந்தாரா சாப்டர் ஒன் போன்ற படங்கள் அறிவிக்கப்பட்டது..

அதேபோல் கூலி படத்தில் மோனிகா படலுக்கு நடனமைத்த சாண்டி மாஸ்டருக்கு சிறந்த நடன இயக்குனர் விருது அறிவிக்கப்பட்டது. இசைத்துறையில் சிறந்த பங்களிப்புக்காக இளையராஜாவுக்கும், திரை துறையில் சிறந்த பங்களிப்பாக கமல்ஹாசனுக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதுபோக இன்னும் பலருக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. உலக சினிமாவில் சிறந்த பங்களிப்புக்காக டைட்டானிக், அவதார் போன்ற படங்களை இயக்கிய ஜேம்ஸ் கேமராமனுக்கு விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE மண்வாசனை