ETR.FM

முதல் நாளில் ரூ.20 கோடி வசூல்!.

22.11.2026 14:47 2 நிமிட வாசிப்பு
முதல் நாளில் ரூ.20 கோடி வசூல்!.
தனுஷ் நடிப்பில்  நேற்று வெளியான படம் ஓம். அமரன் வெற்றிக்கு பின் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள இந்த படத்தில் சாய் பல்லவி, மம்முட்டி, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 



 நேற்றேஉ வெளியான இப்படம் நல்ல விமர்சனங்களையே பெற்று வருகிறது.  தனுஷ் அரசியல் வருகை குறித்து சம்ஈப காலமாக் வரும் செய்திகளுக்கிடையே இப்படம் வெளியாவதால் அவரது ரசிகர்கள் இப்படத்தை திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர்.  தனுஷ், சாய் பல்லவியின் நடிப்பு பாராட்டுகளைப் பெற்றாலும், திரைக்கதையின் வேகம் மற்றும் படத்தின் நீளம் குறித்து கலவையான விமர்சனங்களும் வெளியாகியுள்ளன
 
இந்த நிலையில் ஓம் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. sacnilk இணையதளம் வெளியிட்டுள்ள தகவலின்படி,  , இந்தியா முழுவதும் முதல் நாளில் 6,628 காட்சிகளில் திரையிடப்பட்ட இப்படம் ரூ.17.70 கோடி நிகர வசூலைப் பெற்றுள்ளது. இதில் தமிழ் பதிப்பு மட்டும் 4,023 காட்சிகள் மூலம் ரூ.13.35 கோடி வசூலித்துள்ளது.
 
தெலுங்கில் 1,615 காட்சிகள் மூலம் ரூ.4 கோடியும், இந்தியில் 990 காட்சிகள் மூலம் ரூ.35 லட்சமும் வசூலாகியுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் மட்டும் முதல் நாளில் ரூ.20.55 கோடி மொத்த வசூலைப் பெற்றுள்ளது ஓம்  திரைப்படம். தமிழ் பதிப்பில்தான் அதிக வசூல் கிடைத்துள்ள நிலையில், அடுத்தடுத்த நாட்களில் படத்தின் வசூல் எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.
பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE மண்வாசனை