கட்டாரின் மனித உரிமை பதிவுகள் தொடர்பான பரவலான விமர்சனங்களுக்கு மத்தியிலும், இரு நாடுகளுக்கும் இடையிலான முதலீடுகளை ஊக்குவிக்கும் நோக்கில் கனடா மற்றும் கட்டார் ஆகிய நாடுகள் புதிய ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளன. கனடாவின் வெளிவிவகார அமைச்சர் அனிதா ஆனந்த் மற்றும் கட்டாரின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் கலாநிதி அஹமட் பின் மொஹமட் அல்-சயீத் ஆகியோர் செவ்வாய்க்கிழமை ஒட்டாவாவில் 'கனடா-கட்டார் வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தத்தில்' கைச்சாத்திட்டனர்.
இந்த ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளுக்குத் தலைமை தாங்கிய கனடாவின் சர்வதேச வர்த்தக அமைச்சர் மனிந்தர் சித்து, இதன் மூலம் கனடாவில் கட்டாரின் முதலீடுகள் அதிகரிப்பதோடு, கட்டாரில் கனேடிய வர்த்தகர்களுக்கு அதிக வாய்ப்புகள் உருவாகும் எனத் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் பின்வரும் முக்கிய தரவுகளைச் சுட்டிக்காட்டியுள்ளார். கட்டாரின் பொருளாதாரப் பெறுமதி சுமார் 300 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளதுடன், 'கட்டார் முதலீட்டு அதிகாரசபை' சுமார் 600 பில்லியன் அமெரிக்க டொலர் சொத்துக்களுடன் உலகின் மிகப்பெரிய அரச முதலீட்டு நிதியங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.கனடா மற்றும் கட்டார் இடையிலான இருதரப்பு வர்த்தகம் 350 மில்லியன் டொலர்களைக் கடந்துள்ளதுடன், கட்டாரிலிருந்து கனடாவிற்குக் கிடைத்துள்ள நேரடி வெளிநாட்டு முதலீடு 338 மில்லியன் டொலர்களை எட்டியுள்ளது.அடுத்த பத்தாண்டுகளில் கனடாவிற்கு 1 டிரில்லியன் டொலர் புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்கும், அமெரிக்கா அல்லாத ஏற்றுமதிகளை இரட்டிப்பாக்குவதற்கும் வளைகுடா பிராந்தியம் மிகவும் முக்கியமானது என மனிந்தர் சித்து குறிப்பிட்டார்.முன்னதாக கடந்த ஜனவரி மாதம் கனேடிய பிரதமர் மார்க் கார்னி பெய்ஜிங் விஜயத்தைத் தொடர்ந்து தோஹாவிற்குச் சென்றிருந்தார். இதன் மூலம் கட்டாருக்கு விஜயம் செய்த முதலாவது பதவியிலுள்ள கனேடியப் பிரதமர் என்ற பெருமையை அவர் பெற்றார்.இதேவேளை, சீனா மற்றும் கட்டார் ஆகிய நாடுகளின் மோசமான மனித உரிமைப் பதிவுகளைச் சுட்டிக்காட்டி, பிரதமர் மார்க் கார்னியின் இந்த நகர்வை கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஷுவ் மஜும்தார் எக்ஸ் (X) தளத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார்.கனடாவின் எதிரிகளுக்கு ஆதரவளித்த நாடுகளுடன் உறவை வளர்ப்பதற்குப் பதிலாக, தாய்வான் மற்றும் இஸ்ரேலுடன் உறவுகளைச் சீராக்கியுள்ள அரபு நாடுகளுடன் வர்த்தகத் தொடர்புகளை வலுப்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்